அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

26th ஏப்ரல் 2024 19:24

தொலை நோக்கு

பொதுமக்களுக்குச் சேவையினை வழங்குகின்ற சகல நிறுவனங்களிலும் அரசகரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனமாக செயற்படுதல்.

பணிக்கூற்று

அரசகரும மொழிக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசாரணை, கண்காணிப்பு, கல்வி மற்றும் ஆலோசனை மூலம் பொதுமக்களுக்கான இருமொழி ரீதியான தேவைப்பாடுகளை வழங்குதல்.

நோக்கம்

ஆணைக்குழுவின் பொது நோக்கங்கள் கீழே காட்டப்பட்டவாறு அமைகின்றன.

  • அரசகரும மொழிகளின் உபயோகம் தொடர்பிலான கொள்கை நெறிகளை விதந்துரைப்ப அத்துடன் இலங்கை அரசியலமைப்பின் IV ஆம் அத்தியாயத்தில் உள்ள ஏற்பாடுகளுடன் இசைந்தொழுகுவதைக் கண்காணித்தலும் மேற்பார்வை செய்தலும். (இதனகத்துப்பின்னர் “அரசியலமைப்பு ” எனக்குறிப்பீடு செய்யப்படும்),

  • அரசியலமைப்பின் 18 ஆம் உறுப்புரையில் குறிப்பீடு செய்யப்பட்டிருக்கும் மொழிகளின் உபயோகத்தை, ( இதனகத்துப் பின்னர் “இயைபான மொழிகள்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) அரசியலமைப்பின் iv ஆம் அத்தியாயத்தின் தாற்பரியத்துக்கும் நோக்கத்திற்கும் இணங்க உறுதிப்படுத்துவதற்கு அவசியமாக கூடியவாறான அத்தகைய நடவடிக்கைகளையும் வழிமுறைகளையும் எடுத்தல்;

  • அரசகரும மொழிகள் நன்கு மதிக்கப்படுதலை மேம்படுத்துவதுடன், அவற்றின் அந்தஸ்து, சமத்துவம், உபயோக உரிமை என்பன ஏற்றுக் கொள்ளப்படுதலை, பேணப்படுதலை அத்துடன் தொடர்ந்து பேணப்படுதலை மேம்படுத்துதல்,

  • அது தானாக செயற்பட்டும் அத்துடன் இதனால் பெறப்படும் எவையேனும் முறைப்பாடுகளிலிருந்தும் புலனாய்வுகளைச் செய்வதோடு 1991 ம் ஆண்டின் 18 ஆம் இலக்க சட்டத்தின் ஏற்பாடுகளினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளவாறான குறைத் தீர்ப்பு நடவடிக்கையை எடுத்தல்.

பிரதான பணிகள்

குறித்த நோக்கங்களை வெற்றிகொள்வதற்காக ஆணைக்குழுவானது நான்கு பிரதான பணிகளை நிறைவேற்றுகின்றது.

  • அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கும் மொழி உரிமைகள் மீறல் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்தல்.

    விசாரணை

  • இலங்கை அரசகரும மொழிகளின் பிரயோகம் தொடர்பில் அரசியலமைப்பின் கண்காணிப்பு ஏற்பாடுகள் அரச இயந்திரத்தால் சரிவர பின்பற்றப்படுகின்றனவா என்பது பற்றி விழிப்பாக இருத்தல்.

    கண்காணிப்பு

  • குறித்த மொழிகளின் தராதரம் மற்றும் பிரயோகம் தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்டுதல்.

    கல்வி

  • மொழிக்​ கொள்கை நெறிகளின் தொகுப்பிற்குத் தேவையான பரிந்துரைகளை சமர்ப்பித்தல்.

    ஆலோசனை