நிகழ்வுகள்
ஊடகவியலாளர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி
கிழக்கு பாக்கிஸ்தானில் (வங்களாதேசம்) உள்ள பெரும்பான்மை மக்களால் வங்காள மொழி பேசப்பட்டாலும் 1948 ஆம் ஆண்டின் அப்போதைய பாக்கிஸ்;தான் அரசு உருது மொழியை ஒருமித்த பாக்கிஸ்;தான் நாட்டின் ஒரே தேசிய மொழியாக அறிவித்தது. இதற்குக் கிழக்கு பாக்கிஸ்;தான் மக்கள் தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர். கிழக்கு பாக்கிஸ்;தான் மக்கள் அவர்களது தாய் மொழியான வங்காள மொழியைக் குறைந்தது தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டுமென்று கோரினார்கள்.
1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாக்கிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடாத்தப்பட்டப் போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக> நினைவு கூரப்படும் இந்நாள் சர்வதேச தாய் மொழித் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1999 ஆம் ஆண்டில் பெப்ரவரி 21 ஆம் திகதியை பன்னாட்டு தாய்மொழி நாளாக யூனெஸ்கோ அமைப்பு அறிவித்ததுமுதல் உலகம் முழுவதிலும் 2000 ஆம் ஆண்டிலிருந்து பெப்ரவரி 21 ஆம் திகதி பன்னாட்டு தாய்மொழி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இச்சர்வதேச தாய் மொழித் தினத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக> ஊடகவியலாளர்களை “தாய் மொழியின் பிரயோகம்” குறித்து விழிப்புணர்வூட்டும் நிகழ்வு 2024.02.19 ஆம் திகதி இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் வளவாளர்களாக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.டீ.கலன்சூரிய அவர்கள்> அரசகரும மொழிகள் ஆணைக்குழு அங்கத்தவரும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறைத் தலைவருமான சிரேஷ்ட பேராசிரியர் சந்தகோமி கோப்பரஹேவா அவர்கள்> அரசகரும மொழிகள் ஆணைக்குழு அங்கத்தவரும் களனிப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைத் தலைவருமான கலாநிதி கவிதா இராஜரத்தினம் அவர்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு பீ.ஏ.தம்மிந்த குமார அவர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ் மொழி தினம்
வருடாந்தம் ஒக்டோபர் மாதத்தினுள் தமிழ் மொழி தினம் கொண்டாடப்படுவதுடன்> 2022 ஆம் ஆண்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் இத்தமிழ் மொழி தினத்தினை முன்னிட்டு கொழும்பு கல்வி வலயத்தினுள் தமிழ் மொழிமூலம் மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் 22 பாடசாலைகளில் “மொழி மேம்பாட்டுத் தர வட்ட நிகழ்ச்சித் திட்டத்தினை” முதன்மையாகக் கொண்டு 2022.10.28 ஆம் திகதி இலங்கை மன்றத்தில் விசேட நிகழ்வொன்று நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வானது பொது நிருவாக> உள்நாட்டலுவல்கள்> மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு எம்.எம்.பீ.கே மாயாதுன்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் “மொழி மற்றும் சமூக நலன்” எனும் கருப்பொருளில் சிறப்புரையொன்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ் பிர~hந்தன் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாடசாலைகளினால் அரங்கேற்றப்பட்ட தமிழ் கலாசார நிகழ்வுகளினால் இந்நிகழ்வு மிளிர்ந்தது. இந்நிகழ்வானது தமிழ் கலாசாரத்தினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்;ததுடன்> சிறப்பு விருந்தினர்களை வரவேற்றலானது தமிழ் பண்பாட்டிற்கமைய இடம்பெற்றதுடன் கலாசாரச் சின்னங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அரசகரும மொழிகள் வாரம் – 2021 கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்கள்
வருடாந்தம் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரையில் இடம்பெறும் அரசகரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துடன் இணைந்து 2021 ஆம் ஆண்டில் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரை போட்டிக்காக பாடசாலை மாணவர்களினால் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஆகிய மொழிமூலங்களில் 1210 இற்கும் மேற்பட்ட கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இக்கட்டுரைப் போட்டியானது, கொரோனா தொற்று நிலைமையானது நாட்டினுள் நிலவிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும்கூட மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் வழங்கிய சிறப்பான ஒத்துழைப்பினை பெரிதும் பாராட்டுகின்றோம்.
நடுவர்களின் தீர்ப்பு இறுதி தீர்ப்பாக அமைந்ததுடன், அந்நடுவர் குழாமானது பல்கலைக்கழக மொழி வல்லுனர்களைக் கொண்டமைந்ததாகும்.
கட்டுரைகளின் மதிப்பீட்டின் போது, சிங்கள மொழிமூல கட்டுரைகள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிங்களமொழித் துறைத் தலைவர் பேராசிரியர் சந்தகோமி கோப்பரஹேவா அவர்களின் தலைமையிலும், தமிழ் மொழிமூல கட்டுரைகள் களனிப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கவிதா இராஜரத்தினம் அவர்களின் தலைமையிலும் மற்றும் ஆங்கில மொழிமூல கட்டுரைகள் ருகுணு பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். ஜீ. எஸ் சமரவீரகே அவர்களின் தலைமையிலும் இடம்பெற்று வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
அதற்கமைவாக சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலங்களில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டமானது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
வெற்றியாளர்கள் – கனிஷ்ட பிரிவு
வெற்றியாளர்கள் – சிரேஷ்ட பிரிவு
வெற்றிபெற்ற ஆக்கங்களை வாசிப்பதற்கு இங்கே சொடுக்கவும்
சிங்கள மொழித் தினம்
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதியில் இடம்பெறும் சிங்கள மொழித் தினத்தை முன்னிட்டு மொழியின் முக்கியத்துவம் தொடர்பில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வொன்றினை நடாத்துவதற்கு அரசகரும மொழிகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
சர்வதேச தாய்மொழித் தினம்
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதியில் இடம்பெற்ற சர்வதேச தாய்மொழித் தினத்தை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.
அரசகரும மொழிகள் வாரம்
2021.07.01 ஆம் திகதியிலிருந்து 2021.07.05 ஆம் திகதி வரையிலான அரசகரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.
விழிப்புணர்வு
2021 மே மாதத்தில் ருகுணு பல்கலைக்கழகத்தில் அரசகரும மொழிக் கொள்கைத் தொடர்பான விழிப்புணர்வு.