விசாரணை
மொழி உரிமைகள் மீறல்கள் தொடர்பில் கிடைக்கப் பெறும் பொது மக்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் பணி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விசாரணைப் பணி தொடர்பிலான படிமுறைகள் கீழே காட்டப்பட்டுள்ளன.
-
முறைப்பாடு தொடர்பில் உரிய நிறுவனத் தலைவரிடமிருந்து அவதானிப்புகளைக் கோருதல்.
-
அவதானிப்புகளை ஆராய்ந்தபின் ஆணைக்குழுவினால் பொருத்தமான பரிந்துரைகள் வழங்கப்படல்.
-
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவருக்கு 90 நாள் கால அவகாசத்தை வழங்குதல்.
-
மேற்குறிப்பிடப்பட்ட பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை சோதனையிடுவதற்கு தொடர் அவதானிப்பு நடவடிக்கைகளை நடாத்துதல்.
-
மேற்குறிப்பிடப்பட்ட பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்தல்.
முறைப்பாடுகளை விசாரணை செய்தல்
ஆணைக்குழுச் சட்டத்தின் III ஆவது பகுதியில் 18 முதல் 28 வரையான பிரிவுகளின் பிரகாரம் முறைப்பாடுகள் விசாரணை செய்யப்படுகின்றன.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் மீறப்பட்டால் ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை செய்து நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள இயலும்.
-
பொது நிறுவனங்களுடன் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்ளுதல்
-
பொது நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பப் படிவங்களை / மாதிரிப் படிவங்களை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் கோருதல்
-
வழக்குகளின் விசாரணையின் போது தேவைகளுக்கேற்ப சிங்களம் / தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவருடைய சேவையைக் கோருதல்
-
பொது நிறுவனங்களிடமிருந்து ஆவணங்களுக்கான சிங்களம் அல்லது தமிழ் மொழிபெயர்ப்பினைக் கோருதல்
-
அரச சேவைக்கான பிரவேச பரீட்சைகளில் சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் தோற்றுதல்
-
உயர்கல்வியின் போது ஓர் அரசகரும மொழியில் நடாத்தப்படும் பாடநெறியொன்றை மற்றைய அரசகரும மொழியிலும் பெற்றுக்கொள்ளுதல்
-
அலுவலகக் கடிதங்கள், சுற்றுநிருபங்களின் அறிவுறுத்தல்களை மும்மொழிகளிலும் பெற்றுக்கொள்ளுதல்
முறைப்பாடுகளை விசாரணை செய்யும் முறைகள்
-
அவதானிப்புகளைக் கோருதல்
-
பரிந்துரைகளை வழங்குதல்
-
பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தொடர்ச்சியாக அவதானித்தல்.
-
சட்ட நடவடிக்கைகள் எடுத்தல்