அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

13th அக்டோபர் 2024 05:35

கண்காணிப்பு

அரசகரும மொழிகளின் பயன்பாடு தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் அரச மற்றும் அரை அரச நிறுவனங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா என்பது பற்றி கண்காணிக்கப்படும். இதற்காக நிறுவன மட்டங்களிலான மொழிக் கணிப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    நிறுவனத்தை இனங்காணுதல்

  • மொழிக் கணிப்பாய்விற்காக நிறுவனங்களைத் தெரிவு செய்யும் போது பொது மக்களுக்கு மிகவும் நெருங்கிய சேவைகளை வழங்குதல் மற்றும் இரு மொழி நிர்வாகப் பிரிவுகளுக்குள் அமைந்திருத்தல் போன்ற விடயங்கள் கருத்திற் கொள்ளப்படும்.


  • கணிப்பாய்விற்கான தினங்களை தெரிவு செய்தல்

  • கணிப்பாய்வு தொடர்பில் முன்கூட்டியே எழுத்து மூலமான அறிவித்தல் வழங்கப்படும். இந்த அறிவித்தல் வழங்கப்படுவது கணிப்பாய்விற்கு அத்தியாவசியமானத் தகவல்களை தயார்படுத்திக் கொள்வதற்காகவே ஆகும்.

    உதா: இரண்டாம் மொழித் தேர்ச்சியைப் பெற்றிருக்கும் அதிகாரிகளின் பெயர்ப் பட்டியல்.


  • கணிப்பாய்வை மேற்கொள்ளுதல்

  • சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆணைக்குழுவின் கணிப்பாய்வுக் குழுவினால் பௌதீக ரீதியாக சென்று பார்க்கப்படும்.


  • பரிந்துரைகளை வழங்குதல்

  • அரசகரும மொழிக் கொள்கைக்கு ஒத்திசைவற்ற நிகழ்வுகளை சரி செய்வதற்காக பரிந்துரைகளை வழங்குதல். அவ்வாறு இனங்காணப்பட்ட ஒத்திசைவற்ற நிகழ்வுகள் பரிந்துரைகள் வழங்கப்பட்ட திகதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் திருத்தம் செய்யப்படுதல் வேண்டும்.


  • தொடர் அவதானிப்பு

  • உரிய பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பது பற்றித் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.