அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

21st ஏப்ரல் 2024 04:56

கல்வி

அரச அலுவலர்கள், பொதுமக்கள், பாடசாலை பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற பங்குதாரர்களுக்கு மத்தியில் விழிப்புணர்வூட்டலை ஏற்படுத்துதல்.

 • அரசகரும மொழிக் கொள்கை தொடர்பிலான சட்டப் பின்னணி பற்றி அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டுதல்.

 • பிரஜைகளின் மொழி உரிமைகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுதல்.

 • மொழி வட்டங்களை உருவாக்குவது தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வூட்டுதல்.

 • மொழி மேம்பாட்டுத்தர வட்டங்களை நிறுவுதல்.

 • இலங்கை பல கலாசாரங்களை, பல சமயங்களை, பல இனங்களைக் கொண்ட ஒரு நாடாகும். இலங்கைச் சமூகத்தில் பல்வேறு மொழிகளைப் பேசுகின்றவர்கள் வாழ்கின்றனர். சகல இனங்களுக்கிடையில் ஒற்றுமை, சகவாழ்வு, ஒருமைப்பாட்டை ஏற்படுத்த மொழி உரிமைகளை தெரிந்து கொள்வது இன்றியமையாததாகும். அது ஒரு நாட்டின் அபிவிருத்திக்கான சிறந்த அறிகுறியாகும். சமூக ஒற்றுமையின் அடிப்படை அத்திவாரத்தை அமைக்கக் கூடியதாக இருப்பது பாடசாலை மாணவர்களுக்கூடாகவேயாகும். இந்த அத்திவாரத்தை பாடசாலைகளில் உருவாக்குவதற்காக மொழி மேம்பாட்டுத் தர வட்டங்களை நிறுவுவதற்கு ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  மொழி மேம்பாட்டுத் தர வட்டம் என்பது பாடசாலைகளுக்குள் மும்மொழிச் சூழலொன்றை உருவாக்குவதற்கு பாடசாலை மாணவர்களினாலேயே ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு செயற்பாடுகளினால் உருவாக்கப்பட்ட ஒரு வட்டமாகும், இதற்காக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் 1/2015 ஆம் இலக்கம் கொண்ட 06.01.2015 ஆம் திகதிய சுற்றுநிருபத்தில் ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

  மொழி வட்டங்களை நிறுவுதல் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் கீழ்க்கண்டவாறு மேற்கொள்ளப்படுகின்றன.

  மொழி மேம்பாட்டுத் தர வட்டங்களை நிறுவுவது தொடர்பில் மாவட்ட மட்டத்தில் பாடசாலைகளை விழிப்புணர்வூட்டுதல்.

  மொழி மேம்பாட்டுத் தர வட்டம் நிறுவப்பட்டு 03 மாத காலத்திற்குள் வட்டத்தின் வருடாந்த செயற்பாட்டுத் திட்டம் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கோருதல்.

  ஆணைக்குழுவினால், செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைவாக மொழிவட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் தொடர் அவதானிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
மொழி மேம்பாட்டுத் தர வட்டங்களை நிறுவுவதற்குத் தேவையான ஒத்துழைப்பினை கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களினூடாக பெற்றுக்கொள்ள இயலும்.

   
 • அரசகரும மொழிகள் ஆணைக்குழு

 • கல்வி அமைச்சின் இரண்டாம் தேசிய மொழிகள் பிரிவு

 • பொது நிர்வாக, உள்ளூராட்சி சபைகள் மற்றும் ஜனநாயக நிர்வாகம் தொடர்பான அமைச்சின் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்புப் பிரிவு

 • உயர் கல்வி அமைச்சு

 • சகல சமய நிறுவனங்கள்

 • மாவட்ட செயலகங்கள்

 • பிரதேச செயலகங்கள்

 • தேசிய கல்வி நிறுவகம்

 • பிரதேச மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரிவின் கீழ் நிறுவப்பட்டுள்ள மொழிச் சங்கங்கள்