புகைப்படத் தொகுப்பு
தமிழ் மொழி தினம்
[13]Oct. 28, 2022
வருடாந்தம் ஒக்டோபர் மாதத்தினுள் தமிழ் மொழி தினம் கொண்டாடப்படுவதுடன் 2022 ஆம் ஆண்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் இத்தமிழ் மொழி தினத்தினை முன்னிட்டு கொழும்பு கல்வி வலயத்தினுள் தமிழ் மொழிமூலம் மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் 22 பாடசாலைகளில் “மொழி மேம்பாட்டுத் தர வட்ட நிகழ்ச்சித் திட்டத்தினை” முதன்மையாகக் கொண்டு 2022.10.28 ஆம் திகதி இலங்கை மன்றத்தில் விசேட நிகழ்வொன்று நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வானது பொது நிருவாக> உள்நாட்டலுவல்கள்> மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு எம்.எம்.பீ.கே மாயாதுன்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் “மொழி மற்றும் சமூக நலன்” எனும் கருப்பொருளில் சிறப்புரையொன்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ் பிர~hந்தன் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாடசாலைகளினால் அரங்கேற்றப்பட்ட தமிழ் கலாசார நிகழ்வுகளினால் இந்நிகழ்வு மிளிர்ந்தது. இந்நிகழ்வானது தமிழ் கலாசாரத்தினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்;ததுடன்> சிறப்பு விருந்தினர்களை வரவேற்றலானது தமிழ் பண்பாட்டிற்கமைய இடம்பெற்றதுடன் கலாசாரச் சின்னங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அரசகரும மொழிகள் ஆணைக்குழு 